search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உயிரிழப்பு"

    தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  அருகே ஒசட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா (வயது53). இவரது மனைவி பாக்கியம்மா. தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே ராஜப்பா வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவரும் அவரது மனைவி பாக்கியம்மாவும் நேற்று மாலை தேன்கனிக்கோட்டை அருகே கிரியானபள்ளியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வாழை இலை அறுத்து விட்டு பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு திரும்பி வந்தனர்.

    அப்போது சாலிவாரம் கூட்ரோடு அருகே அஞ்செட்டி நோக்கி வந்த மினிவேன் ஒன்று ராஜப்பா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட பாக்கியம்மா தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜப்பா படுகாயம் அடைந்தார். அப்போது மினிவேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 

    இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த பாக்கியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    காயமடைந்த ராஜப்பாவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினிவேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
    மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து இன்று நடைபெற வேண்டிய திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் கற்பகம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 62). இவர் மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக இன்று காலை கோவிலுக்கு வந்தார்.

    அம்மன் சன்னதி பிரகார வீதியில் வலம் வந்தபோது மகேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற போராடினர். இருப்பினும் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.

    கோவில் ஆகம விதிகளின்படி சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே பக்தர்களை அனுமதிக்க முடியும். எனவே கோவிலில் இருந்த அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இன்று முகூர்த்தநாள் என்பதால் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திடீரென பெண் உயிரிழந்ததால் திருமணங்கள் நிறுத்தப்பட்டன. பரிகார பூஜைகள் முடிந்ததும் திருமணங்கள் நடைபெறும்.

    கண்டமங்கலம் அருகே குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது. இதில் தூங்கி கொண்டிருந்த பெண் உடல் கருகி பலியானார்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால் மருதூர் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(வயது55).விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவர் அந்த பகுதியில் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென குடிசை வீடு தீ பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது கண்விழித்த விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வரமுயன்றார். ஆனால் வீட்டில் பற்றி எரிந்த தீயின்வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குடிசைவீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. தீயை அணைக்க முடியவில்லை. நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். 

    பின்பு அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி தீயில் கருகி இறந்து கிடந்தார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

    தீயில் கருகி பலியான விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தீ எப்படி பிடித்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தர பிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #SelfieDeath #UPFair
    பாலியா:

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சதார் பகுதியில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நேற்று கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் திடீரென ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விசாரணையில் அந்தப் பெண் ராணி (வயது 20) என்பதும், செல்பி எடுக்கும்போது நிலைதடுமாறி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவந்தது. #SelfieDeath #UPFair
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவண மூர்த்தி. இவரது மனைவி நாகமணி(வயது 47).

    இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காயச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனை நடந்தது.

    இதில் நாகமணிக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். நாகமணியோடு சேர்த்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu

    ×